4.2.13

மாதிரி பள்ளி

ஜெய் குருதேவ்

குருஜியின் அருளாசியுடன் முதன் முறையாக பொள்ளாச்சி பகுதியில்

வாழும் கலை மாதிரி பள்ளியாக (அனைத்து ஆசிரியர் மற்றும் மாணவ,

மாணவியர்) அனைவரும் வாழும் கலை பயிற்சி எடுக்கின்றனர்.

பள்ளியின் பெயர் :முத்துசாமி கவுண்டர் நினைவு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி

கோபாலபுரம் சுங்கம்.

பள்ளி தாளாளர்;திருமதி;விஜயலக்ஷுமி 9788816667


Photo: Students with Swamiji



Photo: Model School MMS Matriculation School,Gopalapuram.     
சுவாமிஜிக்கு வரவேற்பு 

பொள்ளாச்சி பகுதியில் புதிய வாழும் கலை மையங்கள்

பொள்ளாச்சி பகுதியில் புதிய வாழும் கலை மையங்கள் துவக்கம்

1)கிணத்துக்கடவு

பொறுப்பாளர்:திரு .மோகனசுந்தரம் 90954 86754

2)தாமரைகுளம்

பொறுப்பாளர் :திரு.சன்முககுமார் 9965347893

3)நல்ழட்டிபளையம்

பொறுப்பாளர் ;திருமதி.மேனகா 8973566777

4)கோபாலபுரம் சுங்கம்

பொறுப்பாளர் ;முத்து கிருஷ்ணசாமி 9486444556

5)வேட்டைக்கரன்புதூர்

பொறுப்பாளர் : திரு .தண்டபாணி 9994483554

8.1.13

தெய்வீகமும், கொண்டாட்டமும்

  ஸ்ரீஸ்ரீ குருகுலம்  திவான்ஷாபுதூரில், நவம்பர் 26 அன்று தெய்வீகத்துடனும், கொண்டாட்டத்துடனும் புனிதமான ருத்ரபூஜை சிறப்பாக நிகழ்ந்தது. ஸ்ரீ சுந்தர் அண்ணா அவர்கள் தம் குழுவினரோடுவந்து,  சீரோடும் சிறப்போடும் பூஜையை  நடத்திக்கொடுத்தார்கள்.


பூஜைக்குமுன் தியானம்

பூஜைக்கான ஏற்பாடுகள்



பூஜையும் அலங்காரமும்

பூஜையும் அலங்காரமும்

நிறைவான அலங்காரம்


பூஜை நிறைவடைந்தபின்பு  புகழ்பெற்ற வாழும்கலைப் பாடகர்களான  திரு.ஸ்ரீனிவாசன்  மற்றும் திருமதி. சாலினிஸ்ரீனிவாசன் ஆகியோரது தெய்வீக சத்சங்கம் நிகழ்ந்தது,

 இன்னிகழ்விற்கு  அவர்களே இசைக்கலைஞர்களையும், ஒலி அமைப்பு சாதனங்களையும் கொண்டுவந்து  அந்த தெய்வீக இன்னிசையை நிகழ்த்திக்கொடுத்தது அனைவரையும் மெய்சிலிர்க்கவைத்தது.

பக்தியும்.ஆனந்தமும், கொண்டாட்டமும் அன்று அப்பகுதிமுழுவதும் நிறைந்திருந்தது.


இவ்வற்புதமான நிகழ்வு இச்சிற்றூரில் மிகச்சிறப்பாக நிகழ அரும்பாடுபட்ட திரு.அரசு (DDC Member Pollachi) அவர்களையும், திரு.சிவா (AOL Teacher, Rudhrapooja coordinator T.N) அவர்களையும், நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்புற செய்திருந்த  வாழும்கலை தொண்டர்களையும்  அனைவரும்  நிறைந்தமனதோடு பாராட்டியது  நெகிழ்ச்சியானதாக இருந்தது. திரு. கமலக்கண்ணன் (S.T.C, Tamilnadu)  அவர்கள் முழுமையாக இக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு இன்னிகழ்வைச் சிறப்பித்தார்.

மொத்தத்தில் குரு அருளையும், தெய்வீகத்தையும் அனைவரும் உணர்ந்த அற்புதமான நாளாக அது இருந்தது.


15.9.12

Ashram Snaps





Tamil AMC Participants

ஸ்ரீஸ்ரீ குருகுலம்- சுத்தப்படுத்தும் சேவை





9-9-2012 அன்று திவான்-ஷா-புதூரில் உள்ள நமது வாழும்கலை மையமான ஸ்ரீஸ்ரீ குருகுலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை, நமது வாழும்கலை அன்பர்கள் சுமார் 15 பேர்  ஒன்றுகூடி  சுத்தப்படுத்தி  பூச்செடிகளை நட்டு  அழகுபடுத்தியுள்ளனர்.

அனைவரும் ஒன்றாகஅமர்ந்து  தாங்கள் கொண்டுவந்திருந்த  உணவை  அனைவருடனும்  பகிர்ந்து  உண்டது  ஒரு ஆனந்தமான  நிகழ்வாக  அமைந்தது.


25.8.12

குருதேவருடன்- தியானம், ஞானம், கானம் கொண்டாட்டம்


ஆகஸ்டு 17 முதல் 21 வரை ஆசிரமத்தில் தமிழ் முதுநிலைப்பயிற்சி குருதேவர் முன்னிலையில் நடந்தது.

அற்புதமான  அந்த தருணங்கள்  இங்கு வண்ணப்படங்களாக.




 நெடும்பயணத்திற்கிடையில் ஓய்வு.







1000க்கும்  மேற்பட்ட தமிழ் அன்பர்கள்  கலந்துகொண்ட  ஆன்மிக வைபவமாக  இந்தமுதுநிலைப்பயிற்சி  அமைந்தது. இப்பயிற்சி இவ்வளவு சிறப்பாகநடக்கப் பாடுபட்ட  அனைவருக்கும்  எமது  வாழ்த்துக்கள்.

23.8.12

வாழும்கலை காட்சியகம்







வாழும்கலை பொள்ளாச்சியும், குரு கிருபா டிவைன் ஷாப்பும் இணைந்து பொள்ளாச்சியில்  வாழும்கலைப்பயிற்சி, ஸ்ரீஸ்ரீ ஆயுர்வேதா, மற்றும் டிவைன் ஷாப் ஆகியவற்றைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த  அமைத்த காட்சியம் இது 

ஆகஸ்ட் 3 ம் தேதியிலிருந்து 5 ஆம் தேதிவரை இந்த காட்ச்சியகம் பொள்ளாச்சி எம்.சி. வேலுசாமி திருமணமண்டபத்தில் நடந்த லைஃப் ஸ்டைல் எக்ஸ்போவில் இடம்பெற்றிருந்தது. சுமார்  10000 பேர் இக்காட்சியகத்துக்கு வருகைதந்து வாழும்கலையைப்பற்றியும்  நமது  செயல்பாடுகள்பற்றியும் அறிந்துகொண்டனர்.

26.6.12

தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டம் 2012-பொள்ளாச்சி

சுவாமி ஞானதேஜ் அவர்கள் மற்றும் முதுநிலைப்பயிற்சி ஆசிரியர் திரு சம்பத்ஜி ஆகியோர் முன்னிலையில் வாழுங்கலை பொள்ளாச்சிப் பகுதி சார்பாகக் கொண்டாடப்பட்ட தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டம்


குரு ஸ்லோகம்



குருப்ர்ம்ஹா



நிறைவுரை

25.6.12

குழந்தைகளுக்கு ஆன்மிகப் பயிற்சி-திவான்ஷாபுதுர்






திவான்ஷாபுதூர் தொடக்கப்பள்ளியில் அவ்வூர் வாழுங்களை அன்பர்களால் குழந்தைகளுக்கு, மனநலம் உடல்நலம் பேணும் வாழும்கலை பால்சேத்னாசிவிர் பயிற்சி 25-6-2012 முதல் 29-6-2012 வரை வழங்கப்பட்டது.

இப்பயிற்சியில் 6 ஆம் வகுப்பைச்சேர்ந்த 50 குழந்தைகள் பயன்பெற்றனர். பயிற்சியை வழும்கலை ஆசிரியர் திரு.சதீஷ்குமார் அவர்கள் வழங்கினார்கள்

14.5.12

குருதேவர் பிறந்தநாள் கொண்டாட்டம்-2012

குருதேவர் பூஜ்ய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜி அவர்களின் பிறந்தநாள் திவான்ஷாபுதூர் வாழும்கலை அன்பர்களால் திவான்ஷாபுதூர் மாகாளியம்மன் கோவிலில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

விழாகொண்டாட்டம் அற்புதமான தெய்வீக இன்னிசை, குருதேவரின் குரலால் வழிநடத்தப்பட்ட ஆழ்ந்த அமைதியான தியானம் ஆகியவற்றைக்கொண்டதாக அமைந்தது.

இவ்விழாவை சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த வாழுங்கலை அன்பர்களும், உள்ளூர் பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சுமார் 600 பேர் கலந்துகொண்ட நிறைவான அறுசுவை அன்னதானத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.







20.3.12

ஸ்ரீஸ்ரீ குருகுலம் - குரு அருளால் விளைந்த கூட்டுமுயற்சியின் பலன்

 



திவான்-ஷா-புதூர், தமிழக, கேரள எல்லையோரம் அமைந்த இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம். இக்கிராமம் பொள்ளாச்சியிலிருந்து திருச்சூர் செல்லும் பாதையில் அமைந்துள்ளது.

விவசாயமும், அது சார்ந்த விளைபொருள் வணிகமும் உழைப்பிலும் அறிவிலும் சிறந்த இப்பகுதி மக்களின் முக்கியத் தொழில்கள். இப்பெருமைகளுக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விதமாக 1997ஆம் வருடம் முதல் இப்பகுதியில் வாழும்கலைப் பயிற்சி நடந்து வருகிறது அதன்மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் வாழும்கலைபயின்று வளமான அமைதியான நல்லதொரு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

இச்சிறப்புகளுக்கெல்லாம் மகுடம் சூட்டினாற்போல் இங்கு அவர்களது கூட்டுமுயற்சியால் குருதேவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் நல்லாசிகளுடன் வாழும்கலைக்கென்று சொந்தமாக சிறப்பான வகையில் " ஸ்ரீஸ்ரீ குருகுலம் " எனும் அழகிய பெயரில் ஒரு பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

அவர்களது கூட்டுமுயற்சி மேன்மேலும் சிறக்கவும், குரு அருளுடன் மேலும் சிறப்பாக அவர்கள் சமுதாயத்தொண்டாற்றவும் நாமும் வாழ்த்துவோம்